தெனாலியின் பயப் பட்டியலை விட எடப்பாடி பழனிசாமியின் பயப் பட்டியல் பெரியது என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். இது குறித்து பேசியுள்ள அவர், பழனிசாமிக்கு மோடி, அமித்ஷா என்றார் பயம். ஈடி, சிபிஐ, ஐடி என்றால் பயம். எல்லாம் பயம் மயம் என சீனப் பெருஞ்சுவர் போல நீள்கிறது. திமுகவை கண்டித்தும், பயத்தால் பாஜகவை வலியுறுத்தியும் அதிமுக கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை ஆதரிக்கும் பாஜகவின் உன்னத தோழன் அதிமுக என விமர்சித்துள்ளார்.