லங்கா கார்னர்: கொட்டும் மழையில் ஆட்சியர், ஆணையாளர் ஆய்வு!

54பார்த்தது
கோயம்புத்தூர் மாநகராட்சி, மத்திய மண்டலத்திற்கு உட்பட்ட லங்கா கார்னர் பகுதியில், மழைநீர் வெளியேற்றும் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்தி குமார் பாடி மற்றும் மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் ஆகியோர் நேற்று இரவு நேரில் சென்று பார்வையிட்டு விடிய விடிய, ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த ஆய்வின் போது, மழைநீர் வெளியேற்றும் பணிகளின் தற்போதைய நிலை குறித்து அதிகாரிகள் விளக்கமளித்தனர். மழைக்காலத்தில் நீர் தேங்குவதைத் தடுக்கும் வகையில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தனர். ஆட்சியர் கிராந்தி குமார் பாடி, மழை நீரை விரைவாக வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். மேலும், மழைக்காலத்தில் எந்தவித இடையூறும் ஏற்படாமல் இருக்க தயார் நிலையில் இருக்குமாறும் கேட்டுக்கொண்டார். இந்த ஆய்வின் போது மாநகராட்சியின் பல்வேறு துறை அலுவலர்களும் உடனிருந்து, தங்களது துறை சார்ந்த விவரங்களை ஆட்சியரிடம் தெரிவித்தனர். மழைக்கால முன்னேற்பாடுகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி