கோயம்புத்தூர் மாநகராட்சி, வடக்கு மண்டலத்திற்கு உட்பட்ட
ஆவாரம்பாளையம் பகுதியில், மழைநீர் வெளியேற்றும் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்தி குமார், மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் மற்றும்
மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் ஆகியோர் நேற்று இரவு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, மழை நீரை விரைவாக வெளியேற்ற அலுவலர்களுக்கு அறிவுறுத்தினர். மேலும், பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு தேவையான உணவு உள்ளிட்ட பொருட்களை வழங்கி, குறைகளை கேட்டறிந்தார்கள்.