பாமாயில் எண்ணெயை தடை செய்துவிட்டு, தேங்காய் எண்ணெயை விற்பனை செய்ய வேண்டும் என நூறு ரேஷன் கடைகளில் 100 நாள் ஆர்ப்பாட்டம் என்ற ஆர்ப்பாட்டத்தை கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கம் மற்றும் ஏர்முனை இளைஞர் அணி முன்னெடுத்து ஆர்ப்பாட்டத்தை நடத்தி நிலையில் 28-வது நாளாக நேற்று கட்சி சார்பற்ற விவசாய சங்கம், பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் எண்ணெயை ரேஷன் கடையில் விற்பனை செய்ய வேண்டும் என்ற ஆர்ப்பாட்டத்தை தொட்டிபாளையம் பகுதியில் உள்ள ரேஷன் கடை முன்பாக நடத்தியது. இதில் 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு பாமாயிலுக்கு பதிலாக ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெயை விற்பனை செய்ய வேண்டும் என்ற கோஷங்களை எழுப்பினர். தொடர்ந்து 100 நாட்கள் நடத்தப்படும் இந்த போராட்டத்திற்கு அரசு செவி சாய்க்காவிட்டால் தலைமைச் செயலகத்தை முற்றுகையிட போவதாக அறிவித்து இந்த போராட்டமானது நடைபெற்றது.