இரவில் தலைக்கு எண்ணெய் வைப்பதை மருத்துவர்கள் பரிந்துரைப்பதில்லை. நீண்ட நேரம் முடியில் எண்ணெய் இருந்தால் பொடுகுத் தொல்லை, பூஞ்சை தொற்று ஆகிய பிரச்சனைகள் ஏற்படலாம். எனவே குளிப்பதற்கு 1-2 மணி நேரத்திற்கு முன்னதாக எண்ணெய் கொண்டு, முடியின் வேர்க்கால் வரை மசாஜ் செய்ய வேண்டும். அதன் பின்னர் சீகக்காய் கொண்டு அலசலாம். எண்ணெய் இளஞ்சூடாக இருந்தால் வேர் வரை நன்றாக ஊடுருவும்.