கிணத்துக்கடவு - Kinathukadavu

பேரூர்: தொடரும் மழை; சிறுவாணியின் நீர் மட்டம் உயர்வு

பேரூர்: தொடரும் மழை; சிறுவாணியின் நீர் மட்டம் உயர்வு

வட கிழக்கு பருவ மழை துவங்க உள்ள நிலையில் கேரள மாநில அடர் வனப்பகுதியான மேற்குத்தொடர்ச்சி மலைத்தொடரில் கடந்த சில நாட்களாக மழைப்பொழிவு காணப்படுகிறது. நேற்று (அக். 11) காலை 8: 00 மணி நிலவரப்படி, அணை பகுதியில் 8 மி. மீ பதிவாகியிருக்கிறது துாறல் மழை தொடர்கிறது. அணைக்கு நீர் வரத்து காணப்படுவதால் நீர் மட்டம் மெல்ல உயர்ந்து வருகிறது. நேற்றைய (அக். 11) தினம் 42 அடியாக உயர்ந்திருந்தது. குடிநீர் தேவைக்காக 9. 82 கோடி லிட்டர் தண்ணீர் எடுக்கப்பட்டது. சோலையாறில் 20, சின்னக்கல்லார் -31 மி. மீ, மழை பதிவானது. மற்ற இடங்களில் சாரல் மழையே காணப்பட்டது. வானிலை ஆராய்ச்சியாளர் சந்தோஷ் கிருஷ்ணன் கூறுகையில், தென்மேற்கு வங்கக்கடலில் இலங்கைக்கும், தமிழகத்துக்கும் இடையே மன்னார் வளைகுடா பகுதியில், புதிய காற்று சுழற்சி உருவாகியுள்ளது. சனி, ஞாயிறு, திங்கள் ஆகிய மூன்று நாட்கள் கனமழைக்கு வாய்ப்புண்டு. அக். , 16, 17ல் இருந்து கொங்கு மண்டலத்தில், மழை வாய்ப்பு குறையத் துவங்கும். இம்மாத இறுதி அல்லது நவம்பர் முதல் வாரத்தில் மீண்டும் கனமழைக்கு வாய்ப்பிருக்கிறது என்று கூறியுள்ளார்.

வீடியோஸ்


మహబూబ్‌నగర్ జిల్లా