திருச்செங்கோடு
திருச்செங்கோட்டில் கந்த சஷ்டி விழா - முருகன் திருவீதி உலா
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் அமைந்துள்ள சுப்பிரமணியர் திருக்கோவிலில் வள்ளி தெய்வானை கந்த சஷ்டி விழா நடைபெற்றது. இதில் திருச்செங்கோடு முருகனை பல்லக்கில் வைத்துக் கொண்டு, மேளதாளத்துடன் முக்கிய வீதிகளில் ஊர்வலம் நடத்தினர். இந்த நிகழ்வில் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு முருகனை வழிபட்டனர். மேலும், வீதிகளில் உள்ள பக்தர்கள் முருகனுக்கு சூடம், ஊதுபத்தி போன்றவை காணிக்கையாக செலுத்தி வழிபட்டனர்.