போக்குவரத்து வசதியற்ற மற்றும் எளிதில் அணுக முடியாத மலை கிராமப் பகுதிகளில் வாழும் பழங்குடியினர் மற்றும் இதர மக்களின் அவசர மருத்துவ சேவைகளுக்காக பைக் ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 10 மாவட்டங்களில் ரூ.1.60 கோடி செலவில் 25 பைக் ஆம்புலன்ஸ் வாகனங்கள் வாங்குவதற்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 108 அவசர கால வாகனங்கள் உள்ள இடங்களுக்கு கொண்டு சேர்ப்பதற்கான இணைப்பு வாகனமாக இவ்வாகனங்கள் செயல்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.