நாமக்கல் மாவட்டம் குருசாமிபாளையத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஶ்ரீ மகா மாரியம்மன் திருக்கோயிலில் கோவில் திருவிழாவை முன்னிட்டு இன்று ரூபாய் நோட்டுகளால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளிக்கப்பட்டது. முன்பாக அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றது. பிறகு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கண்டுகளித்தனர்.