ஒருமையில் பேசிய சீமான்.. வெளிநடப்பு செய்த நிர்வாகிகள்
நாம் தமிழர் கட்சியின் நெல்லை சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் கூட்டம் இன்று (நவ.14) நடைபெற்றுள்ளது. இதில், நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்துகொண்டார். இந்த கூட்டத்தில் கலந்துகொண்ட நிர்வாகிகள் சிலர் வெளிநடப்பு செய்துள்ளனர். அவர்களிடம் கேட்டபோது, தவெக நிர்வாகிகளான தாங்கள் குறைகளை கூறியபோது, கடுப்பான சீமான், ஒருமையில் பேசியதாகவும், சாதி ரீதியாக திட்டியதாகவும் கூறியுள்ளனர். இதனால், கூட்டத்தில் இருந்த வெளிநடப்பு செய்ததாக தெரிவித்துள்ளனர்.