அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் தனது ‘X’ தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம், ஆதிதிராவிடர் – பழங்குடியின மக்களில் இருந்து தொழில்முனைவோர்களை உருவாக்கிடும் திராவிட மாடலின் புரட்சித் திட்டமாகும். இந்த திட்டத்தின் மூலம் இதுவரை 1988 பயனாளிகளுக்கு ரூ.453 கோடி கடனும், ரூ.230 கோடி மானியமும் வழங்கப்படுள்ளது” என குறிப்பிட்டுள்ளார்.