ஊட்டி மலை ரயில் சேவை நாளை மீண்டும் தொடக்கம்

80பார்த்தது
ஊட்டி மலை ரயில் சேவை நாளை மீண்டும் தொடக்கம்
மேட்டுப்பாளையம் - ஊட்டி இடையே 5 நாட்களுக்குப் பிறகு நாளை (நவம்பர் 8) மீண்டும் மலை ரயில் சேவை தொடங்கப்பட உள்ளது. கடந்த நவ.3ம் தேதி பெய்த மழையால் மலை ரயில் பாதையில் ஏற்பட்ட மண் சரிவு காரணமாக சேவை ரத்து செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், சீரமைப்பு பணிகள் நிறைவடைந்ததை அடுத்து நாளை முதல் மேட்டுப்பாளையம் - ஊட்டி இடையே மலை ரயில் போக்குவரத்து தொடங்க உள்ளது. இதனால், சுற்றுலாப்பயணிகள் உற்சாகமடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி