திருவள்ளூர் மாவட்டத்திற்கு வெளியூரில் இருந்து வந்து, கெட்டினமல்லியில் வீடு கட்டி வாழ்ந்த மூதாட்டி கனகபுஜம் உயிரிழந்தார். அவரது உடலை அப்பகுதி சுடுகாட்டில் புதைக்க எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனால், அவரது சொந்த இடத்தின் அருகே உள்ள பூங்காவில் புதைக்கப்பட்டது. அங்கு இடம் வாங்கியவர்கள், மூதாட்டி உடலை வேறு இடத்தில் புதைக்கக்கோரி வழக்கு தொடர்ந்தனர். நீதிமன்ற உத்தரவை அடுத்து 111 நாட்களுக்கு பின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு சொந்த ஊரான கோரிமேட்டில் புதைக்கப்பட்டது.