திருப்பத்தூர் வடக்கு மாவட்ட நாதக செயலாளர் தேவேந்திரன் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் சீமான் கூட்டணி அமைக்காமல் தனித்து போட்டியிடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கட்சியில் இருந்து விலகினார்கள். இது தொடர்பாக இன்று (நவ. 07) செய்தியாளர்கள் சந்திப்பு நடத்திய போது அதே கட்சியை சேர்ந்த சிலர் உள்ளே நுழைந்து சீமானுக்கு எதிராக பேசினால் அடிப்போம் என கூறி மோதலில் ஈடுபட்டனர்.