மகன் எடுத்த பணத்தை திருப்பி தராததால் தாய் கடத்தல்

74பார்த்தது
தெலங்கானா மாநிலம் சிர்சில்லா அருகே ஸ்ரீனிவாஸ் என்பவர் கரும்பு வெட்டும் தொழில் செய்து வருகிறார். மகாராஷ்டிராவைச் சேர்ந்த லால் தேவகர் கரும்பு அறுவடைக்காக வைத்திருந்த் ரூ.3 லட்சம் பணத்தை ஸ்ரீனிவாஸ் எடுத்துள்ளார். சம்பளம் தராததால் பணத்தை எடுத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், தேவ்கரின் ஆதரவாளர்கள் நேற்று (நவ.6) ஸ்ரீனிவாஸின் குடும்பத்தினரை தாக்கிவிட்டு, அவரது தாயாரை காரில் கடத்திச் சென்றுள்ளனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நன்றி: TeluguScribe

தொடர்புடைய செய்தி