239 பயணிகளுடன் 2014-ல் மாயமான MH370 பயணிகள் மலேசிய விமானத்தை தேடும் பணி மீண்டும் தொடங்கப்பட்டுள்ளதாக மலேசிய அரசு அறிவித்துள்ளது. அமெரிக்காவை சேர்ந்த கடல் ஆய்வு நிறுவனமான ஓஷன் இன்பினிட்டி, தேடல் திட்டத்தை சமர்ப்பித்துள்ள நிலையில், விமானத்தின் இடிபாடுகள் கண்டுபிடிக்கப்பட்டால் மட்டுமே கட்டணம் செலுத்தப்படும் எனவும் மலேசிய அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில், MH370 விமானத்தின் மர்ம முடிச்சுகள் அவிழ்க்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.