மகாராஷ்டிரா: சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஒருவர், சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றால், தனது தொகுதியில் உள்ள திருமணம் ஆகாத இளைஞர்களுக்கு திருமணம் செய்து வைப்பதாக வாக்குறுதி அளித்துள்ளார். பார்லி தொகுதியில் போட்டியிடும் ராஜேசாகேப் தேஷ்முக் அளித்த புது வகை வாக்குறுதி, கிராமப்புறங்களில் திருமண வயது ஆன ஆண்களுக்கு மணமகள் கிடைக்கவில்லை என்ற பிரச்சனையை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.