குமாரபாளையம் - Kumarapalayam

பள்ளிபாளையம்: தகுதிச் சான்றிதழ் புதுப்பிக்காத ஆம்புலன்ஸ் பறிமுதல்

பள்ளிபாளையம்: தகுதிச் சான்றிதழ் புதுப்பிக்காத ஆம்புலன்ஸ் பறிமுதல்

பள்ளிபாளையம் அரசு மருத்துவமனை முன் ஆம்புலன்ஸ் வாகனங்கள் நிறுத்தப்பட்டு பொதுமக்கள் அழைப்புக்கு ஏற்ப இயங்கி வருகின்றன. இந்நிலையில் அரசு மருத்துவமனை அருகில் சென்ற ஆம்புலன்ஸை, வட்டார போக்குவரத்து அதிகாரி மாதவன், ஆய்வாளர் சிவகுமார் ஆகியோர் நிறுத்தி ஆய்வு செய்தனர். வாகனத்தை கொல்லம்பாளையம் அனந்தகிருஷ்ணன் என்பவர் ஓட்டி வந்தார்.  அவரிடம் வாகன ஆவணங்களை ஆய்வு செய்ததில் ஆம்புலன்ஸ் இயக்கத் தேவையான தகுதிச் சான்றிதழை புதுப்பிக்காமலும், வாகனக் காப்பீட்டையும் பெறாமலும் இயக்கியது தெரியவந்தது. இதையடுத்து வாகனத்தை பறிமுதல் செய்த வட்டார போக்குவரத்து அதிகாரிகள், பள்ளிபாளையம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

வீடியோஸ்


జోగులాంబ గద్వాల జిల్లా