குமாரபாளையம் - Kumarapalayam

குமாரபாளையம்: 20 பவுன் நகை, ரூ.20 லட்சம் பணம் திருட்டு

குமாரபாளையம்: 20 பவுன் நகை, ரூ.20 லட்சம் பணம் திருட்டு

குமாரபாளையம் அருகே 20 பவுன் நகை, 20 லட்சம் பணம் திருட்டு வழக்கில் இருவர் கைது செய்ததுடன் நகை, பணம் பறிமுதல் செய்யப்பட்டது. குமாரபாளையம் கல்லங்காட்டுவலசு, விவேகானந்தா கார்டன் பகுதியில் வசிப்பவர் டாக்டர் யுவராஜ், 32. எலும்பு முறிவு டாக்டரான இவர் ஈரோடு தனியார் மருத்துவ மனையில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி கடலூரில் படித்து வருகிறார். இவரது மகன், புளியம்பட்டியில் உள்ள மாமனார் வீட்டில் உள்ளார். யுவராஜின் பெற்றோர் மட்டும் இந்த வீட்டில் உள்ளனர். குழந்தையை பார்க்க, யுவராஜின் பெற்றோர் இருவரும் பிப். 8, காலை 10: 30 மணிக்கு புளியம்பட்டி சென்றனர். மறுநாள் மாலை 05: 30 மணியளவில் திரும்பி வீட்டிற்கு வந்து பார்த்த போது, வீட்டின் பூட்டு, உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே இருந்த பீரோ உடைக்கபட்டிருந்தது. இது குறித்து யுவராஜுக்கு தகவல் தர, நேரில் வந்து பார்த்த யுவராஜ், நகை, பணம் திருடப்பட்டது உறுதியானது. இது குறித்து குமாரபாளையம் போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டது. அவர்களிடமிருந்து 20 பவுன் நகை, 20 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

வீடியோஸ்


జోగులాంబ గద్వాల జిల్లా