தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் மாமாங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் மாலா (36). இவருக்கு சுஜித்குமார் (11) என்ற மகன் உள்ளார். கணவர் இறந்த நிலையில், மகனுடன் திருப்பூர் சென்று, பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று தனது மகனுக்கு உணவில் விஷம் கலந்து கொடுத்துவிட்டு, அவரும் குடித்துள்ளார். இருவரையும் அக்கம் பக்கத்தினர், மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சைப் பலனின்றி தாய் உயிரிழந்த நிலையில், மகனுக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.