கடனை திருப்பி கேட்டவரின் 6 வயது மகள் கொலை
ஆந்திர மாநிலத்தை சேர்ந்த அசன்துல்லா - சானியா தம்பதி. இவர்களது மகள் அஸ்வியா(6). கடந்த 1ஆம் தேதி அஸ்வியா காணாமல் போயுள்ளார். இதுகுறித்த புகாரின் அடிப்படையில் சிறுமியை தேடிவந்த போலீசார், கடந்த 2 நாட்களுக்கு முன்பு சிறுமியை அப்பகுதியில் உள்ள கால்வாயில் சடலமாக மீட்டனர். விசாரணையில், அசன்துல்லா அப்பகுதியை சேர்ந்த பெண்ணுக்கு கொடுத்த கடனை திரும்ப கேட்டதால் ஆத்திரமடைந்த அப்பெண், தனது உறவினர்களுடன் இணைந்து சிறுமியை கொலை செய்தது தெரியவந்துள்ளது.