‘தமிழ் தேசியம்.. ஆரியம்’ - விஜய்யை மறைமுகமாக சாடிய சத்யராஜ்?
சென்னை அடையாறு முத்தமிழ் பேரவை சிவாஜி நினைவிடம் அருகே, திராவிட இயக்கத் தமிழர் பேரவை நடத்தும் "திராவிடமே தமிழுக்கு அரண்" என்ற கருத்தரங்களில் நடிகர் சத்யராஜ் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், “ஆரியம் திராவிடத்தை எதிர்ப்பது சரி தான். ஆனால், தமிழ் தேசியம் என்ற பெயரில் எதிர்த்து ஆரியத்திற்கு துணை போவது மிகவும் ஆபத்தானது” என்றார். இந்த கருத்துக்கு தவெக விஜய்யை, சத்யராஜ் மறைமுகமாக சாடியதாக நெட்டிசன்கள் தெரிவித்து வருகின்றனர். நன்றி: தந்தி டிவி