கோடியக்கரை சரணாலயத்துக்கு வெளிநாட்டு பறவைகள் வருகை
நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்துள்ள கோடியக்கரை வன உயிரின பறவைகள் சரணாலயத்துக்கு ஆண்டுதோறும் வடகிழக்கு பருவ மழைக்காலத்தில் ஆயிரக்கணக்கான பறவைகள் கூட்டம், கூட்டமாக வந்து செல்வது வழக்கம். இந்த சரணாலயத்துக்கு ஆண்டுதோறும் சைபீரியா, ஆஸ்திரேலியா, இலங்கை உள்ளிட்ட நாடுகளில் இருந்தும் பறவைகள் வந்து செல்லும். நிகழாண்டு வடக்கிழக்கு பருவ மழை தொடங்கியும், இப்பகுதியில் மழை குறைவாகவே உள்ளது. இதனால் பறவைகள் வருகையும் தாமதமாகியுள்ளது. இந்தநிலையில், கடந்த ஓரிரு வாரமாக மழைப் பொழிவு தொடா்ந்து வருகிறது. இதைத்தொடா்ந்து பறவைகளின் வருகை தொடங்கியுள்ளது.