வேதாரண்யம் - Vedharanyam

வேளாங்கண்ணியில் குவிந்த சுற்றுலா பயணிகள்

தீபாவளி பண்டிகை தொடர் விடுமுறை மற்றும் ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறை என்பதால் சுற்றுலாத்தலங்களில் சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். அதன்படி சுற்றுலாத்தலமாகவும் ஆன்மீகத் தலமாகவும் விளங்கி வரும் நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற புனித ஆரோக்கிய மாதா பேராலயத்திற்கு பல்வேறு பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர். மேலும் பேராலயத்தில் நடைபெறும் திருப்பலி, வேளாங்கண்ணி கடற்கரை, முடி காணிக்கை செலுத்தும் இடம், கடைவீதி மெழுகுவர்த்தி கடைகள், பூக்கடைகள் உள்ளிட்ட இடங்களில் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது மேலும் கூட்டம் அதிகரித்து காணப்படுவதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

வீடியோஸ்


நாகப்பட்டினம்