இந்தியாவின் மிகப்பெரிய தொழிலதிபர்களுள் ஒருவரான ரத்தன் டாடா(86) உடல்நலக்குறைவால் அக்.9ஆம் தேதி காலமானார். சுமார் ரூ. 10,000 கோடிக்கு அதிபதியான டாடாவின் சொத்து தொடர்பான உயிலில், அவரிடம் நீண்ட காலமாக பணியாற்றிய ராஜன் ஹா, சமையலர் சுப்பையா ஆகியோருக்கு சொத்துக்கள் எழுதி வைக்கப்பட்டுள்ளன. மேலும், தனது செல்லப்பிராணியான டிட்டோ என்ற நாயின் வாழ்நாள் பராமரிப்புக்கும் டாடா சொத்தை எழுதிவைத்துள்ளார். இது தவிர அந்த உயிலில் டாடாவின் உதவியாளர் சாந்தனு நாயுடுவின் பெயரும் இடம்பெற்றிருந்தது.