கோடியகரையில் ஏராளமான மீன்கள் சிக்கியது

56பார்த்தது
கோடியக்கரையில் நடைபெறும் மீன்பிடி சீசனையொட்டி மீன்பிடிக்க சென்ற படகுகளில் ஏராளமான மீன்கள் பிடிபட்டதால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கோடியக்கரையில் தற்போது மீன்பிடி சீசன் நடைபெற்று வருகிறது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் அண்டை மாவட்டங்களிலிருந்தும் மீனவர்கள் தங்களது படகுகளுடன் கோடியக்கரை வந்து தங்கி மீன்பிடிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று படகில் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற மீனவர் வலைகளில் ஏராளமான நண்டு, வஞ்சிரம், திருக்கை , வாவல் , மயில் மீன் உள்ளிட்ட மீன் வகைகள் ஏராளமாக பிடிபட்டு விற்பனைக்கு வந்தது. வஞ்சிரம் மீன் கிலோ ஆயிரம் ரூபாய்க்கும், வாவல் மீன் கிலோ 800 ரூபாய்க்கும், மயில் மீன் கிலோ 150 ரூபாய்க்கும் , மூன்று புள்ளி நண்டு 210 ரூபாய்க்கும் விற்பனையானது. அதிக அளவில் மீன் பிடிபட்டதால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி