அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கண்டித்து தலைஞாயிறு பேரூராட்சியில்
இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த தலைஞாயிறு பேரூராட்சி பேருந்து நிழலகம் அருகே அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வை கட்டுபடுத்த தவறிய மத்திய, மாநில அரசுகளை கண்டித்து அனைத்து இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் களிமண்ணால் செய்த கெட்டி உருண்டை, முருக்கு, லட்டு, அதிரசம் என தீபாவளி பலகாரங்களை காட்சிப்படுத்தியும், கேஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்தும் பண்டிகை பஜார் என்ற பெயரில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர்.