சோழவந்தான்
மதுரை: மூடிய நெல் கொள்முதல் நிலையம்..விவசாயிகள் கோரிக்கை
மதுரை சோழவந்தான் அருகே உள்ள இரும்பாடியில் அரசு நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வந்தது. இதனை நம்பி அப்பகுதியைச் சுற்றியுள்ள விவசாயிகள், தங்களது நெற்கதிர்களை கொள்முதல் செய்து வந்தனர். இந்நிலையில், தற்போது திடீரென அரசு நெல் கொள்முதல் நிலையத்தை நிறுத்திவிட்டதாக கூறியுள்ளனர். சுமார் 200க்கும் மேற்பட்ட ஏக்கரில் நெற்கதிர்கள் வயல்களில் உள்ள நிலையில், அறுவடை முடியும் வரை நெல் கொள்முதல் நிலையத்தை அரசு நடத்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.