டெல்லி: அசோக் விஹாரில் கணவனை பிரிந்து வாழும் பெண்ணின் 5 வயது பெண் குழுந்தை இறப்பில் ஏற்பட்ட சந்தேகத்தால் போலீஸார் விசாரணை நடத்தியதில் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. குழந்தையின் தாய்க்கு ராகுல் என்பவருடன் இன்ஸ்டாகிராமில் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, ராகுலை திருமணம் செய்து கொள்ள விரும்பியுள்ளார். ஆனால், ராகுல் குழந்தையை ஏற்றுக்கொள்ளவில்லை. எனவே திருமணத்துக்குத் தடையாக இருந்த தனது 5 வயது மகளை அந்த பெண் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார்.