பொங்கல் அன்று அறிவிக்கப்பட்ட சிஏ தேர்வால் விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிலளித்துள்ளார். சிஏ தேர்வுகளை மத்திய அரசு நடத்தவில்லை, ICAI என்ற சுதந்திரமான அமைப்பு நடத்துவதாக குறிப்பிட்டுள்ள பாஜக நிர்வாகி எஸ்.ஜேி.சூர்யாவின் X தள பதிவை மேற்கோள் காட்டி, சரியாக சொன்னீர்கள் சூர்யா.. எதில் பார்த்தாலும், எப்ப பார்த்தாலும் தமிழ் விரோதி பிரச்சாரம், சிலருக்கு பழக்கமாகிவிட்டது போலும்... பதிலளித்துள்ளார்.