
மதுரை: அரசு மருத்துவமனையில், ஒருங்கிணைந்த மது மீட்பு சிகிச்சை
தமிழக அரசின் மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத் துறையின் சாா்பில் 'கலங்கரை' ஒருங்கிணைந்த போதை மீட்புச் சிகிச்சை, மறுவாழ்வு மையத் திறப்பு விழா நடைபெற்றது. இதில் சென்னையிலிருந்து முதல்வா் மு. க. ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் மதுரை மையத்தை திறந்து வைத்தாா். இதைத் தொடா்ந்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில், அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் குத்துவிளக்கேற்றி அந்த மையத்தை பாா்வையிட்டாா். விழாவில், மாவட்ட ஆட்சியா் மா. சௌ. சங்கீதா, மாநகராட்சி மேயா் வ. இந்திராணி, மாநகராட்சி ஆணையா் சித்ரா விஜயன், சட்டப் பேரவை உறுப்பினா் கோ. தளபதி (வடக்கு), மு. பூமிநாதன்(தெற்கு) , அரசு ராஜாஜி மருத்துவமனை முதல்வா் இல. அருள் சுந்தரேஸ் குமாா், மதுரை மாவட்ட சுகாதாரத் துறை இணை இயக்குா் செல்வராஜ் உள்பட பலா் பங்கேற்றனா்.