பள்ளிக்கூடம், அங்கன்வாடி கட்டிதர கோரி பட்டியிலன மக்கள் மனு

55பார்த்தது
மதுரை மாநகர் செல்லூர் காளியம்மன் கோவில் தெரு பகுதியில் உள்ள அம்பேத்கார் நகர் பகுதியில் பட்டியிலன மக்கள் ஏராளமானோர் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த 2006 ஆம் ஆண்டு அம்பேத்கர் பகுதி காலியாக உள்ள பகுதியில் கபடி விளையாட்டு போட்டி நடத்தப்பட்டு இரு்தரப்பு மோதல் ஏற்பட்டு பட்டியலின இளைஞர்கள் 6 நபர்கள் கொலை செய்யப்பட்டனர். இந்த பழிக்கு பழி தொடர்ந்து வந்த நிலையில் தற்போது தான் அந்த பதட்ட நிலை மாறியுள்ளதாகவும், பட்டியிலன மக்கள் வசிக்கும் பகுதியில் கபடி விளையாட்டு மைதானம் இருந்தாலும், மீண்டும் சாதி கலவரம் உருவாகும் சூழ்நிலை ஏற்பட வாய்ப்பு உள்ளதால் அப்பகுதியில்

அங்கன் வாடி மையம், கழிவறை, பெண்களுக்கான பள்ளிகூட வசதி (அல்லது), அரசிற்கு சொந்தமான பொது அலுவலகம் இவற்றை அமைத்து தந்தால் அந்த பகுதியில் பட்டியலின பெண் பிள்ளைகள், ஏழை எளிய நெசவுத் தொழில், கூலித் தொழில் செய்து வரும் குடும்பத்தின் பெண் பிள்ளைகள் கல்வி கற்க வழி வகுப்பதோடு மட்டும் அல்லாமல், இரு தரப்பினர்களின் பாதுகாப்பிற்கும் வழிவகையாக இருக்கும் என கூறி அம்பேத்நகர் பகுதி மக்கள் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி