இந்தியாவின் தேசிய காய்கறி `பூசணி’. இந்தியா முழுவதும் பூசணி வளர்க்கப்படுகிறது. ஏனெனில், பூசணியை வளர்க்க வளமான மண் தேவையில்லை. தரையிலோ, கொடியாகவோ இதைப் படர விடலாம். பூசணி பெரும்பாலும் எளிமையுடன் தொடர்புடையதாகக் கருதப்படுகிறது. அதனால் `ஏழையின் காய்கறி’ என்றும் குறிப்பிடப்படுகிறது. பூசணி ஒரு காயாகக் குறிப்பிடப்பட்டாலும், விஞ்ஞானிகள் இதைப் பழம் என்றே சொல்கின்றனர். பூசணி வட அமெரிக்காவை பூர்வீகமாகக் கொண்டுள்ளது.