மதுரை நகரம் - Madurai City

மாநகராட்சியில் காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரிக்கை

மாநகராட்சியில் காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரிக்கை

மதுரை மாநகராட்சியில் காலிப் பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும் என மாநகராட்சி தொழிலாளா் சங்கம் (சிஐடியு)சாா்பில் சனிக்கிழமை நடைபெற்ற 56- ஆவது ஆண்டு பேரவைக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. மதுரை மேலப்பொன்னகரம், பாரதியாா் பிரதான சாலையில் உள்ள சிஐடியூ மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு சங்கத்தின் மதுரை மாநகா் தலைவா் கே. மீனாட்சிசுந்தரம் தலைமை வகித்தாா். மாவட்ட பொதுச் செயலா் எம். பாலசுப்பிரமணியன், பொருளாளா் கே. கருப்பசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில், மாநகராட்சி, நகராட்சி பணிகளில் தனியாா் மயத்துக்கு வழி வகுக்கும் அரசாணை 152, 139, 10 ஆகியவற்றை ரத்து செய்ய வேண்டும். நகராட்சி விதிகளைத் திருத்தம் செய்யும் தமிழக அரசின் முடிவைக் கைவிட வேண்டும். மதுரை மாநகராட்சியில் உள்ள நிரந்தர காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். முன்னுரிமை அடிப்படையில் வாரிசுதாரா்களுக்கு பணி வழங்க வேண்டும். தினக்கூலி அடிப்படையில் பணியாற்றும் தூய்மைப் பணியாளா்களை நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பேரவையில் சங்கத்தின் மாவட்டத் தலைவராக கே. மீனாட்சிசுந்தரம், பொதுச் செயலராக எம். பாலசுப்பிரமணியம், பொருளாளராக கே. கருப்பசாமி, செயல் தலைவராக ஜி. ரவி ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா்.

வீடியோஸ்


జగిత్యాల జిల్లా