மதுரை மாநகர் பி. பீ. குளம் உழவர்சந்தை அருகே உணவுப்பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தர்பூசணி பழ விற்பனை கடைகளில் ஆய்வு நடத்தியதில் 1200 கிலோ சாயம் ஏற்றப்பட்ட தர்பூசணி பழங்கள் கண்டறியப்பட்டு அழிக்கப்பட்டது.
மேலும், வியாபாரிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து மதுரை மாவட்ட முழுவதும் தர்பூசணி விற்பனை குறித்து சாயம் ஏற்றப்படுகிறதா? என ஆய்வு நடத்தவுள்ளதாக மாவட்ட உணவுப் பாதுகாப்பு அலுவலர் தகவல் தெரிவித்துள்ளார்.