மதுரை: மீனாட்சி அம்மன் கோவில் உண்டியல் காணிக்கை

70பார்த்தது
உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மற்றும் 10 உப கோவில்களுக்கு மாதந்தோறும் உள்ளூர் மற்றும் வெளியூர், வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து அதிகளவில் பக்தர்கள் வருகை தருகின்றனர்.

இந்நிலையில் பக்தர்கள் உண்டியல்களில் காணிக்கையாக செலுத்தும் பணம் மற்றும் தங்கம் மற்றும் வெள்ளி பொருட்களை மதுரை மீனாட்சி அம்மன் கோவில் வளாகத்தில் மாதந்தோறும் எண்ணும் பணியானது நடைபெறும் நிலையில், உண்டியல் காணிக்கை எண்ணும் பணி கோவில் இணை ஆணையர் கிருஷ்ணன் முன்னிலையில் கோவில் ஊழியர்கள், வங்கி ஊழியர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்ற நிலையில் நடைபெற்றது.

இதில் உண்டியல் திறப்பின் பொழுது உண்டியல் வருமானமாக ரொக்கம் ரூ. 75, 48, 747/- (ரூபாய் எழுபத்து ஐந்து இலட்சத்து நாற்பத்து எட்டாயிரத்து எழுநூற்று நாற்பத்து எழு மட்டும்) தங்கம் 257 கிராம், வெள்ளி இனங்கள் 429 கிராம் மற்றும் அயல் நாட்டு நோட்டுக்கள் 335 எண்ணம் வரப்பெற்றுள்ளன என கோவில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கபட்டுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி