கடந்த 2022ம் ஆண்டு தேனி கம்பம் விலக்கு பகுதியில் 8 கிலோ கஞ்சாவை வணிகரீதியாக கடத்திய வழக்கில் காந்திமதி, கோகுல்நாத் மற்றும் ஞானகணேசன் கைது செய்யப்பட்டு வழக்கு விசாரணை மதுரை மாவட்ட போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்நிலையில் வழக்கு விசாரணை நிறைவடைந்து கஞ்சா கடத்திய காந்திமதி, கோகுல்நாத் ஆகியோருக்கு 3ஆண்டுகள் சிறைத்தண்டனையும், தலா 25ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி ஹரிஹரகுமார் உத்தரவிட்டார்.