மதுரை கோரிப்பாளையம் பள்ளிவாசல் பகுதியில் ஈகை திருநாள் புனித ரமலான் பண்டிகையை முன்னிட்டு தமிழக வெற்றி கழகத்தின் மதுரை வடக்கு மாவட்டம் சார்பாக மாபெரும் ரமலான் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி மதுரை வடக்கு மாவட்ட செயலாளர் கல்லணை அவர்கள் தலைமையிலும், கோரிப்பாளையம் பகுதி செயலாளர் ஜெயின் அலாவுதீன், 28வது வார்டு வட்டச் செயலாளர் சையது ஆகியோர் முன்னிலையில் இஸ்லாமியத்தை சார்ந்த 100க்கும் மேற்பட்ட எளிய மக்களுக்கு பலசரக்கு தொகுப்பு மற்றும் வேட்டி, சேலைகள் வழங்கப்பட்டது.
மேலும் இந்நிகழ்வில் முனுச்சாலை பகுதியைச் சார்ந்த பள்ளி மாணவிக்கு படிப்பு ஊக்க தொகையாக 10 ஆயிரம் ரூபாய் ரொக்க பணத்தை த. வெ. க மதுரை வடக்கு மாவட்டம் சார்பாக வழங்கினார்கள்.
இந்நிகழ்வில் புறநகர் மாவட்ட செயலாளர் விஷால் கிருஷ்ணா, கோரிப்பாளையம் பகுதி பொருளாளர் பிலால், பகுதி இணைச் செயலாளர் சுலைமான், 27 வது வார்டு வட்டச் செயலாளர் சீனிவாசன், வட்ட பொருளாளர் மதன், யாசர், வரித், அழகர் மற்றும் கழகத்தின் பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள், தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டனர்.