மதுரையில் 2022இல் கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்ட சுள்ளான் பாண்டி என்பவர் கைது செய்யப்படாமல் இருந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் கொலை வழக்கில் அவர் நீதிமன்றத்தில் சரணடைந்தார். இந்நிலையில், கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்ட நபரை கைது செய்யாமல் பணியில் அலட்சியம் காட்டியதாக மதுரை கூடல் புதூர் காவல் ஆய்வாளர் பாலமுருகனை சஸ்பெண்ட் செய்து மாநகரக் காவல் ஆணையர் நடவடிக்கை எடுத்துள்ளார்.