மதுரை வடக்கு பகுதியைச் சோ்ந்த நீா்நிலை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு நலச் சங்கத்தின் செயலா் மயில்சாமி தாக்கல் செய்த மனு: மதுரை வண்டியூா் கண்மாய் நீா்பிடிப்பு பகுதியில் தகவல் தொழில்நுட்பப் பூங்கா அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. நீா்நிலைகளில் எந்த ஒரு கட்டடமும் கட்டக் கூடாது என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு ஏற்கெனவே உத்தரவிட்டது. எனவே, வண்டியூா் கண்மாய் நீா்பிடிப்பு பகுதியில் தகவல் தொழில்நுட்பப் பூங்கா அமைக்கத் தடை விதித்து உத்தரவிட வேண்டும் என்றார்.
இந்த மனுவை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஜி. ஆா். சுவாமிநாதன், பி. புகழேந்தி அமா்வு அண்மையில் பிறப்பித்த உத்தரவில்,
சம்பந்தப்பட்ட இடத்தை மதுரை மாநகராட்சி கடந்த 1981- ஆம் ஆண்டு உரக்கிடங்கு தயாரிப்பதற்கான இடமாக மாற்றி மறுவரையரை செய்தது. தற்போது பொதுமக்கள் பயன்பாட்டிற்கான இடமாக உள்ளது. எனவே, இந்த இடத்தில் தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைப்பதற்கு தடை விதிக்க முடியாது. மனுதாரரின் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்றனா்.