BREATH ANALIZE மெஷினிடமே வித்தை காட்டிய மதுபோதை ஆசாமி

85பார்த்தது
மதுரை மாநகர் பகுதிகளில் மதுபோதையில் வாகனம் ஓட்டுபவர்களை கண்டறிவதற்கான வாகன தணிக்கையை தீவிரப்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் நேற்றிரவு மதுரை அழகப்பன் நகர் பகுதியில் போக்குவரத்து காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது மதுரை திருப்பரங்குன்றம் பிரதான சாலையில் திருப்பரங்குன்றத்தில் இருந்து பழங்காநத்தம் நோக்கிவந்த கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவே இருந்து தடுப்புகம்பிளை உடைத்தெறிந்தபடி எதிர்புற சாலைக்கு சென்று நின்றது.

இதனையடுத்து அங்கு பணியில் இருந்த போக்குவரத்து காவல்துறையினர் காரை மீட்டு போக்குவரத்தை சரிசெய்தனர். பின்னர் காரை ஓட்டிவந்த நபரை அழைத்துவந்து விசாரணை நடத்தியபோது அதீத மதுபோதையில் இருந்த அந்த நபரின் பெயர் சிவா என்பதும் அதே பகுதியை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது.


உஷ். உஷ். இப்டி ஊதுங்க என மதுபோதை ஆசாமியின் கையை பிடித்து ஊதி TRAIL காட்டியபோதும் அவர் உறுப்படியாக ஊதவில்லை,

அப்போது மது குடிப்பது போல Breath Analaizer மெஷினில் ஜிப் ஜிப்பாய் இழுத்து வித்தை காட்டினார் மதுபோதை ஆசாமி.

என்னய்யா பாடா படுத்துற கூறி மிகப்பெரிய போராட்டத்திற்கு பின்னர் சர்றென்று ஊதிய மதுபோதை 550 பாயிண்ட் அளவிற்கு அதீத மதுபோதையில் இருப்பது தெரியவந்த நிலையில் அபராதம் விதித்தோடு விபத்தை ஏற்படுத்தியாகவும் வழக்குப்பதிவு செய்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி