
மதுரை: பெயிண்ட் கடையில் கீழே விழுந்தவர் மரணம்
மதுரை செல்லூர் அகிம்சாபுரம் 3-ஆவது தெருவைச் சேர்ந்த சோமசுந்தரம் மகன் மணிகண்டன் (38). இவர், மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே உள்ள சிக்கந்தர் சாவடி பகுதியில் பெயிண்ட் மொத்த விற்பனை நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் (பிப். 24) வழக்கம் போல கடையில் பணியில் இருந்த போது மணிகண்டன் கால் தவறி கீழே விழுந்தார். இதில் பலத்த காயமடைந்தவர் மதுரை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இதுகுறித்து அலங்காநல்லூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.