மதுரை மாவட்டம் சமயநல்லூர் அருகே தோடனேரி கிராமத்தில் 1200 ஏக்கர் விவசாய நிலத்தில் விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர். நீர்ப்பாசனத்திற்காக பெரியார் கால்வாயில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படும். இரண்டாவது பொகும் விளைச்சல் பல்வேறு நோய் தாக்குதல் ஏற்பட்டு விவசாயிகள் பாதிக்கப்பட்டனர்.
விவசாயிகள் உற்பத்தி செய்த நெல்லை கொள்முதல் செய்யாததால் அவதிப்படுகின்றனர். இந்த வருடம் பல்வேறு இயற்கை சீற்றங்களாலும் நோய் தாக்குதலிலிருந்தும் பல்வேறு சேதங்கள் ஏற்பட்டிருந்தன. தங்கள் உற்பத்தி செய்த நெல்லை தங்கள் ஊரில் உள்ள மந்தையில் வைத்து அரசு நெல் கொள்முதல் நிலையத்தின் மூலமாக அரசு நேரடியாக விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நெல் அறுவடை செய்து 15 நாட்களுக்கு மேலாக ஊரில் உள்ள மந்தைப் பகுதியில் வெயிலிலும் மழையிலும் நெல் சேதமடைந்து வருகிறது. உடனே அரசு விவசாயிகளின் நெல்லை நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர்.