மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளத்தில் ரூ. 30 லட்சம் மதிப்பீட்டில் நிலையூர் கால்வாய் மீது புதிய பாலம் கட்டுவதற்காக எம். எல். ஏ வெங்கடேசன் தலைமையில் பூமி பூஜை இன்று (பிப். 24)நடைபெற்றது. இதில் ஒன்றிய செயலாளர் பசும்பொன் மாறன், கிளை செயலாளர் கேபிள் ராஜா மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதன் மூலம் பொதுமக்களின் நீண்ட கால கோரிக்கை நிறைவேறியுள்ளது என அப் பகுதியினர் தெரிவித்தனர்.