மதுரை: அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இரண்டாவது நாள்

78பார்த்தது
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே கீழக்கரை கிராமத்தில் உள்ள கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கத்தில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு இரண்டாவது நாளாக இன்று (பிப்ரவரி 12) மாபெரும் ஜல்லிக்கட்டு நடைபெற்றது. காலையில் அமைச்சர் மூர்த்தி பச்சைக் கொடி அசைத்து ஜல்லிக்கட்டை துவக்கிவைத்தார். ஜல்லிக்கட்டுப் போட்டியில் 880 காளைகளும், 407 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர். வெற்றிபெற்ற காளைகளுக்கும், வீரர்களுக்கும் சைக்கிள், குக்கர், பஞ்சுமெத்தை, தங்கக்காசுகள் உள்ளிட்ட சிறப்புப் பரிசுகள் வழங்கப்பட்டன. ஜல்லிக்கட்டு நிறைவடைந்தபின்னர் அமைச்சர் மூர்த்தி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கத்தில் நடைபெற்ற இரண்டுநாள் ஜல்லிக்கட்டில் 1,800 பேர்கள் பங்கேற்றதாக செய்தியாளர்களிடம் அமைச்சர் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து வரும் ஞாயிற்றுக்கிழமை 16ஆம் தேதி சோழவந்தான் தொகுதியின் சார்பாக ஜல்லிக்கட்டு நடைபெறும் என அமைச்சர் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி