சோழவந்தான்: வடை சுட்ட முன்னாள் அமைச்சர்.

78பார்த்தது
மதுரையை அடுத்த நகரியில், பழனி செல்லும் பக்தர்களுக்கு ஆண்டுதோறும் முன்னாள் அமைச்சர் ஆர். பி. உதயகுமார் சார்பில் அன்னதானம் வழங்கி வருகிறார். மூன்று வேளையும் சாப்பாடு மற்றும் சிற்றுண்டி வகைகளும் கொடுக்கப்பட்டு வருகின்றன.

நேற்று (ஜன14) காலையில் பக்தர்களுக்கு கொடுப்பதற்காக வடை சுட தயாரானது. யாரும் எதிர்பாராத வேளையில் அடுப்படிக்கு சென்ற முன்னாள் அமைச்சர், தானே அமர்ந்து வடை சுட்டார். பின் அதனை பக்தர்களுக்கு வழங்கினார்.

அங்கு வந்த பக்தர்கள் சிலர், ‘நன்கு வடை சுடுகிறாரே! ’ என்று நகைச்சுவையாக சொல்லி, அவருக்கு பொங்கல் வாழ்த்து தெரிவித்தனர். உடனே பதில் அளித்த உதயகுமார், “எனக்கு உண்மையான வடை தான் சுடத்தெரியும். ஒரு சிலரைப் போல வாயில் வடை சுட தெரியாது. வரவும் வராது! ” என்று சிரித்தபடியே பதில் சொன்னார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி