மதுரை மாவட்டம் சோழவந்தான் வ. உ. சி சிலை முன்பு தமிழ்நாடு விவசாய சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஒன்றிய அரசின் புதிய உணவுக் கொள்கையால் தமிழ்நாடு அரசு நெல் கொள்முதல் தடை செய்யப்பட்டுள்ளது.
ஒன்றிய அரசின் நெல் கொள்முதல் உத்தரவால் விவசாயம் செய்யும் விவசாயிகளின் உற்பத்தி பொருளுக்கு சரியான விலை கிடைக்கவில்லை. இதனால் விவசாய சங்கங்கள் இன்று தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தினர். அதன் ஒரு பகுதியாக சோழவந்தானில் விவசாய சங்கம் போராட்டம் நடத்தியது