வாடிப்பட்டி: டி.மேட்டுப்பட்டி சாலையில் கழிவுநீரால் நோய்தொற்று அபாயம்

75பார்த்தது
மதுரை மாவட்டம், வாடிப்பட்டி தாலுகா, T. மேட்டுப்பட்டி கிராமத்தில் கழிவுநீர் ரோட்டில் மையப் பகுதியில் தேங்கி, பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இந்த பிரச்சனை பல நாட்களாக நீடித்து வருவதால், ரோடு மோசமாகி வாகன ஓட்டிகள் ஆபத்தான நிலையில் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. மேலும், பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள் கழிவுநீரை கடந்து செல்ல வேண்டியிருப்பதால், சுகாதார கேடுகள் ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளது. அருகில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி மற்றும் துவக்கப் பள்ளியில் 1000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். பள்ளி வளாகத்தின் அருகிலும் கழிவுநீர் தேங்கியிருப்பதால், மாணவர்கள் பள்ளிக்குச் சென்று வருவதில் பெரும் சிரமத்தை எதிர்கொள்கின்றனர்.

தொடர்புடைய செய்தி