மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே மண்ணாடிமங்கலம் கிராமத்தில் விவசாய கூலி வேலை செய்து வரும் வேல்முருகன், தனது தோட்டத்து வேலைக்கு சென்று வீடு திரும்பும் வழியில், தனது டிவிஎஸ் ஸ்கூட்டி வண்டியை ஸ்டார்ட் செய்யும் போது திடீரென தீப்பிடித்து எரிந்தது. தீப்பிடித்ததை அறிந்த வேல்முருகன், உடனடியாக வண்டியை கீழே தள்ளிவிட்டு பாதுகாப்பான தூரத்தில் நின்றார். அருகில் இருந்தவர்கள் விரைந்து செயல்பட்டு தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக, இந்த தீ விபத்தில் வேல்முருகனுக்கு எந்த காயமும் ஏற்படவில்லை. இருப்பினும், ஸ்கூட்டி வண்டி சேதமடைந்தது. தீ விபத்துக்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.