சோழவந்தானில் திமுக அமைச்சருக்கு சவால்விடும் ஆர்.பி.உதயகுமார்

71பார்த்தது
மதுரை மாவட்டம் சோழவந்தானில் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் அவர்களின் 108வது பிறந்தநாளை கொண்டாடும் விதமாக அதிமுக சார்பாக மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. பொதுக்கூட்டத்தில் ஏராளமான அதிமுக நிர்வாகிகள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முன்னாள் எம்எல்ஏக்கள் கலந்து கொண்டு எம்.ஜி.ஆர் அவர்களின் சாதனை மற்றும் அவர் ஆட்சிகாலத்தில் செய்த நலத்திட்ட உதவிகளை விளக்கி பேசினார். 

முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பேசியபோது மதுரை டான்சன் பிரச்சனைக்காக மக்கள் தன்னிச்சையாக போராட்டம் நடத்திய பிறகு சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டுவந்தீர்களே. நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டுவரும்போது 38 எம்பிக்கள் மௌனசாமிகளாக அமர்ந்திருந்தார்களே ஏன் வாய் திறக்கவில்லை என்று கேள்வி எழுப்பினார். 

சோழவந்தான் மண்ணிலிருந்து சொல்கிறேன் மக்களின் உரிமையை காவு கொடுத்தது திமுக அரசு, முதலமைச்சர் ஸ்டாலின் அரசு என்று பேசினார். தைரியம் இருந்தால் இதே இடத்தில் மேடை போட்டு அமைச்சர் மூர்த்தி பேசச் சொல்லுங்கள் என மிரட்டுபோல் பேசினார். 

மதுரை டான்சன் பிரச்சனையால் இந்த மண்ணின் மைந்தர்கள் அகதியாக அலையப்போகிற ஒரு திட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தும்போது அதற்கு எதிர்ப்பு எடுக்கும் உரிமையை எங்களுக்கு கொடுங்கள் என்று கேட்ட அரசு இந்த திமுக அரசு. டான்சன் பிரச்சனையில் மதுரை மேலூர் பகுதியை பாதுகாப்பான மண்டலமாக அறிவிப்பதில் ஏன் தயக்கம் காட்டுகிறது திமுக அரசு? யாருக என்று கேள்வி எழுப்பினார்.

தொடர்புடைய செய்தி